இரண்டு பேரை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்ரமசிங்க இல்லாமலாக்கிவிடக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அந்த இரண்டு பேரிடமும் இந்த கட்சியை இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
எம்மை இங்கிருந்து விரட்டிவிட்டு, அவர்கள் தமது சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற முயல்கின்றனர்.
ரணில் ஜனாதிபதியான போது, அந்த இருவரில் ஒருவர் நாடாளுமன்றத்திலும் மற்றையவர் ஜனாதிபதி அலுவலகத்திலும் இருந்தனர்.
அவர்களின் பணயக் கைதியாக ரணில் மாறியுள்ளதுடன், அவர்கள் இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவது சாத்தியமில்லை.
அவர்களை நீக்கிவிட்டாவது இந்த இணைவைச் சாத்தியப்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மேலும் குறித்த இருவரினது செயற்பாடுகள் தொடர்பில் ருவான், ஹரீன், மனுஷ, அகில, தலதா ஆகியோர் தொடர்ந்தும் அமைதிகாக்க கூடாது. என்றார்.
இரண்டு பேரை பாதுகாப்பதற்காக கட்சியை பலியாக்க கூடாது - ரணிலிடம் ரவி எம்.பி. கோரிக்கை இரண்டு பேரை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்ரமசிங்க இல்லாமலாக்கிவிடக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அந்த இரண்டு பேரிடமும் இந்த கட்சியை இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எம்மை இங்கிருந்து விரட்டிவிட்டு, அவர்கள் தமது சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற முயல்கின்றனர். ரணில் ஜனாதிபதியான போது, அந்த இருவரில் ஒருவர் நாடாளுமன்றத்திலும் மற்றையவர் ஜனாதிபதி அலுவலகத்திலும் இருந்தனர். அவர்களின் பணயக் கைதியாக ரணில் மாறியுள்ளதுடன், அவர்கள் இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவது சாத்தியமில்லை. அவர்களை நீக்கிவிட்டாவது இந்த இணைவைச் சாத்தியப்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மேலும் குறித்த இருவரினது செயற்பாடுகள் தொடர்பில் ருவான், ஹரீன், மனுஷ, அகில, தலதா ஆகியோர் தொடர்ந்தும் அமைதிகாக்க கூடாது. என்றார்.