• May 13 2025

2,022 பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த ஐடா ஸ்டெல்லா சொகுசு கப்பல்!

Chithra / May 12th 2025, 12:37 pm
image

 

ஐடா ஸ்டெல்லா (Ida Stella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை(12)  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த கப்பலில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம்(12) கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2,022 பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த ஐடா ஸ்டெல்லா சொகுசு கப்பல்  ஐடா ஸ்டெல்லா (Ida Stella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை(12)  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.மேலும் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த கப்பலில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பலில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம்(12) கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement