மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
யாழ். மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதைக் கருதிலெடுத்தே இந்தப் பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நபர் தலையீடின்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருந்தது. போருக்கு முன்னைய காலங்களில் கிளிநொச்சியில் இரவு நேரச் சந்தை கூட இருந்தது.
தென்பகுதியிலிருந்து வரும் வர்த்தகர்கள் அங்க பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் நடந்தது. இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக மீள ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க தனது ஆரம்ப உரையில், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மீள ஆரம்பிப்பதே எமது திட்டம்.
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்துக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து அடுத்த மாத இறுதியில் அதனை ஆரம்பிப்பதே எமது திட்டம். அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் ஒரு நிறுவனமாக்குவதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். தமக்குரிய வசதிகளை ஒழுங்குபடுத்தித் தருவதுடன், தமது நிலையத்தை பிரபல்யப்படுத்தித்தர வேண்டும் என்றும் கோரினர்.
வடக்குக் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர், கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார மத்திய நிலையம் செயற்படுத்தப்படாமல் இருந்தமைக்கு அதிகாரிகளின் அசிரத்தையும் காரணம் எனக் குறிப்பிட்டார்.
மேலும் நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்தக் கூடிய விவசாய உற்பத்திப் பொருட்கள் விற்பனையை முதலில் ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்கான எண்ணக்கருவின் அடிப்படையில் மாவட்டத்தில் சில இடங்களில் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்கு விவசாய உற்பத்திப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடமாரட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று பிரதேசங்களுக்கும் பொருத்தமான இடத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் இடத்தெரிவு பொருத்தமானது எனவும் கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. அத்துடன் வர்த்தகர்கள் குறிப்பிட்ட காலத்தினுள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்காவிடின் அவற்றை மீளப்பெற்று வேறு வர்த்தகர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அடுத்த மாத இறுதிக்குள் அதனை ஆரம்பிப்பது என்றும், அதனை செயற்பாட்டு நிலைமைக்கு கொண்டு வந்த பின்னர் அடுத்தடுத்த கட்டங்கள் தொடர்பில் ஆராயலாம் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில், வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதைக் கருதிலெடுத்தே இந்தப் பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது. மூன்றாம் நபர் தலையீடின்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருந்தது. போருக்கு முன்னைய காலங்களில் கிளிநொச்சியில் இரவு நேரச் சந்தை கூட இருந்தது. தென்பகுதியிலிருந்து வரும் வர்த்தகர்கள் அங்க பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் நடந்தது. இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக மீள ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.அமைச்சர் வசந்த சமரசிங்க தனது ஆரம்ப உரையில், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மீள ஆரம்பிப்பதே எமது திட்டம். யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்துக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து அடுத்த மாத இறுதியில் அதனை ஆரம்பிப்பதே எமது திட்டம். அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் ஒரு நிறுவனமாக்குவதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். தமக்குரிய வசதிகளை ஒழுங்குபடுத்தித் தருவதுடன், தமது நிலையத்தை பிரபல்யப்படுத்தித்தர வேண்டும் என்றும் கோரினர். வடக்குக் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர், கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார மத்திய நிலையம் செயற்படுத்தப்படாமல் இருந்தமைக்கு அதிகாரிகளின் அசிரத்தையும் காரணம் எனக் குறிப்பிட்டார். மேலும் நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்தக் கூடிய விவசாய உற்பத்திப் பொருட்கள் விற்பனையை முதலில் ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்கான எண்ணக்கருவின் அடிப்படையில் மாவட்டத்தில் சில இடங்களில் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்கு விவசாய உற்பத்திப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். வடமாரட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று பிரதேசங்களுக்கும் பொருத்தமான இடத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் இடத்தெரிவு பொருத்தமானது எனவும் கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. அத்துடன் வர்த்தகர்கள் குறிப்பிட்ட காலத்தினுள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்காவிடின் அவற்றை மீளப்பெற்று வேறு வர்த்தகர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அடுத்த மாத இறுதிக்குள் அதனை ஆரம்பிப்பது என்றும், அதனை செயற்பாட்டு நிலைமைக்கு கொண்டு வந்த பின்னர் அடுத்தடுத்த கட்டங்கள் தொடர்பில் ஆராயலாம் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில், வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்