இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் நேற்றையதினம் இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறையடி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை மறைந்த குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச்செல்லப்படும் நிலையில் இன்று(02) மாலை 4 மணியளவில் சமாதி கிரியைகள் ஆத்ம வணக்க நிகழ்வுகள் நல்லை ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சைவ உலகம் திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இறையடி சேர்ந்த நல்லை ஆதீன குருமுதல்வரின் இறுதிக் கிரியை இன்று- சைவ மகா சபை விடுத்த வேண்டுகோள் இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுநல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் நேற்றையதினம் இரவு இறையடி சேர்ந்தார்.கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறையடி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அதேவேளை மறைந்த குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச்செல்லப்படும் நிலையில் இன்று(02) மாலை 4 மணியளவில் சமாதி கிரியைகள் ஆத்ம வணக்க நிகழ்வுகள் நல்லை ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது.குறித்த நிகழ்வில் சைவ உலகம் திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.