• Jul 25 2025

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உருக்கம்!

shanuja / Jul 24th 2025, 9:32 am
image

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும்  என்று  காரைதீவு  பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 



கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.


அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது இன்று 42 வருடங்களாக மறக்கவும் முடியாமல் காணப்படுகின்றது.


1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில்  இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படுகொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது. 


அதாவது பேரினவாத சக்திகளால் இந்த கொடூரமான நிகழ்வு எங்களது இனப்படுகொலை, குறைந்தது அந்த காலகட்டத்தில் மூவாயிரம் பேர், இந்த இனப்படுகொலை செய்யப்பட்டதாக அறிந்துள்ளோம். 


இந்தவகையில் இந்த  இனப்படுகொலைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் அந்த நினைவேந்தலை செய்வோம்.- என்றார்.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உருக்கம் 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும்  என்று  காரைதீவு  பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது இன்று 42 வருடங்களாக மறக்கவும் முடியாமல் காணப்படுகின்றது.1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில்  இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படுகொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது. அதாவது பேரினவாத சக்திகளால் இந்த கொடூரமான நிகழ்வு எங்களது இனப்படுகொலை, குறைந்தது அந்த காலகட்டத்தில் மூவாயிரம் பேர், இந்த இனப்படுகொலை செய்யப்பட்டதாக அறிந்துள்ளோம். இந்தவகையில் இந்த  இனப்படுகொலைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் அந்த நினைவேந்தலை செய்வோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement