• Jul 25 2025

டாக்காவில் நொருங்கிய விமானம்; 170 க்கும் மேற்பட்டோர் காயம் - சிகிச்சை வழங்க செல்லும் இந்திய சிறப்பு மருத்துவக் குழு!

shanuja / Jul 24th 2025, 9:35 am
image

பங்களாதேஷ் டாக்காவிலுள்ள கல்லூரி வளாகத்தில் விழுந்து நொருங்கிய விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவக் குழவை அனுப்பவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம், கடந்த 21 ஆம் திகதி விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. 


விமான விபத்தில் சிக்கி இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன்  170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பங்காளதேசத்திற்கு தீக்காய சிறப்பு மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில்,   

தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு மருத்துவர்கள்  மற்றும் தாதியர்  குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது. 


நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்காகவும் பரிந்துரையை செய்யப்படுவார்கள். அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம் என்று தெரிவித்துள்ளது.


இதற்கிடையே குறித்த விமானம் விழுந்து விபத்திற்குள்ளான மறுநாள் ஏர் இந்திய விமானம் ஒன்றும் தரையிறங்கிய பொழுது தீப்பற்றி விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 


அண்மைக்காலமாக தொடர்ச்சியாக விமானங்கள் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது எனலாம்.

டாக்காவில் நொருங்கிய விமானம்; 170 க்கும் மேற்பட்டோர் காயம் - சிகிச்சை வழங்க செல்லும் இந்திய சிறப்பு மருத்துவக் குழு பங்களாதேஷ் டாக்காவிலுள்ள கல்லூரி வளாகத்தில் விழுந்து நொருங்கிய விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவக் குழவை அனுப்பவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம், கடந்த 21 ஆம் திகதி விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. விமான விபத்தில் சிக்கி இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன்  170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பங்காளதேசத்திற்கு தீக்காய சிறப்பு மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில்,   தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு மருத்துவர்கள்  மற்றும் தாதியர்  குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது. நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்காகவும் பரிந்துரையை செய்யப்படுவார்கள். அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம் என்று தெரிவித்துள்ளது.இதற்கிடையே குறித்த விமானம் விழுந்து விபத்திற்குள்ளான மறுநாள் ஏர் இந்திய விமானம் ஒன்றும் தரையிறங்கிய பொழுது தீப்பற்றி விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக விமானங்கள் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement