• Oct 15 2026

வடக்குக்கு முதல் தடவையாக வருகை தந்த கியூபத் தூதுவர்

Aathira / Oct 15th 2026, 6:48 am
image

இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா, வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாக வருகை தந்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் கியூபத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதல் கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். 

இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில், கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகத் தெரிவித்தார். 

அத்துடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

வடக்குக்கு முதல் தடவையாக வருகை தந்த கியூபத் தூதுவர் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா, வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாக வருகை தந்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் கியூபத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது கருத்துத் தெரிவித்த தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதல் கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில், கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement