• Jul 16 2025

இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று; வீட்டை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு!

Chithra / Jul 15th 2025, 1:31 pm
image


பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி என்ற பெண் பொலிஸாரால் தேடப்பட்டுவருகின்றார். 

இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11)  இஷாரா செவ்வந்தியின் தாயார் மாரடைப்பு காரணமாக  வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிரிழந்துள்ளார். 

பின்னர் இஷாரா செவ்வந்தியின் தாயாரின் சடலம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று; வீட்டை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி என்ற பெண் பொலிஸாரால் தேடப்பட்டுவருகின்றார். இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11)  இஷாரா செவ்வந்தியின் தாயார் மாரடைப்பு காரணமாக  வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிரிழந்துள்ளார். பின்னர் இஷாரா செவ்வந்தியின் தாயாரின் சடலம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement