• Apr 28 2026

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு!

Ziya / Feb 23rd 2026, 5:08 pm
image

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.


இதன் போது அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் பிரதி பொலிஸ் மா அதிபர் கலாச்சார நாட்டிய வரவேற்பு, பொலிஸ் மரியாதை, பூ மாலை மற்றும் அணிவகுப்பு  மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.


மேலும்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள்  பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.


சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை முதல் மாலை வரை  பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள்  சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் , அலுவலகங்கள்  என்பவற்றை பார்வையிட்டதுடன்    பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.இதன் போது அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் பிரதி பொலிஸ் மா அதிபர் கலாச்சார நாட்டிய வரவேற்பு, பொலிஸ் மரியாதை, பூ மாலை மற்றும் அணிவகுப்பு  மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.மேலும்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள்  பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை முதல் மாலை வரை  பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள்  சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் , அலுவலகங்கள்  என்பவற்றை பார்வையிட்டதுடன்    பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement