• Oct 22 2026

விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானம்

Chithra / Oct 22nd 2026, 3:39 pm
image


கொழும்புக்கும் சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இடைநிறுத்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


அத்துடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்ட பின்னரே சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இதனிடையே, குறித்த விமானச் சேவைகளில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தமது பயண ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அதன்படி, இலங்கைக்குள் இருந்து 1979 என்ற தொலைபேசி இலக்கத்தையும், வெளிநாடுகளில் இருந்து +94 11 777 1979 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும்.


மேலும், +94 74 444 1979 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாக குறுஞ்செய்தி மூலமாகவும், தங்களது பயண முகவர்கள் அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானம் கொழும்புக்கும் சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இடைநிறுத்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்ட பின்னரே சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, குறித்த விமானச் சேவைகளில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தமது பயண ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, இலங்கைக்குள் இருந்து 1979 என்ற தொலைபேசி இலக்கத்தையும், வெளிநாடுகளில் இருந்து +94 11 777 1979 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும்.மேலும், +94 74 444 1979 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாக குறுஞ்செய்தி மூலமாகவும், தங்களது பயண முகவர்கள் அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement