• Oct 23 2026

JCB கொள்வனவு விவாதத்தில் சர்ச்சை.! மன்னார் நகரசபை உறுப்பினருக்கு ஒரு மாதத் தடை

Aathira / Oct 23rd 2026, 11:09 am
image

நகரசபைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்க முற்பட்ட உறுப்பினருக்கு ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் நகரசபையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உறுப்பினர் பிரசாத் வடக்கு மாகாண ஆளுநரிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெற்ற நகரசபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டத்தின்போது, JCB கொள்வனவு தொடர்பான விவாதத்தில் இந்த முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க பிரசாத் முற்பட்டபோது, அவருக்குப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

முதலில் தனது கருத்தை முன்வைக்க அனுமதிக்குமாறும், அதன் பின்னர் தவிசாளர் பதிலளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரம் அத்துடன் முடிவடையவில்லை.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு தவிசாளர் உறுப்பினர் பிரசாத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் அவருக்கு ஒரு மாத காலத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரசாத், தனக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாட்டுக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

இந்நிலையில், உறுப்பினரின் முறைப்பாடு தொடர்பில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்? நகரசபை நிர்வாகத்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.

JCB கொள்வனவு விவாதத்தில் சர்ச்சை. மன்னார் நகரசபை உறுப்பினருக்கு ஒரு மாதத் தடை நகரசபைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்க முற்பட்ட உறுப்பினருக்கு ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மன்னார் நகரசபையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உறுப்பினர் பிரசாத் வடக்கு மாகாண ஆளுநரிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெற்ற நகரசபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டத்தின்போது, JCB கொள்வனவு தொடர்பான விவாதத்தில் இந்த முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க பிரசாத் முற்பட்டபோது, அவருக்குப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முதலில் தனது கருத்தை முன்வைக்க அனுமதிக்குமாறும், அதன் பின்னர் தவிசாளர் பதிலளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.ஆனால், இந்த விவகாரம் அத்துடன் முடிவடையவில்லை.இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு தவிசாளர் உறுப்பினர் பிரசாத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் அவருக்கு ஒரு மாத காலத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரசாத், தனக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாட்டுக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.இந்நிலையில், உறுப்பினரின் முறைப்பாடு தொடர்பில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார் நகரசபை நிர்வாகத்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்இந்த விவகாரம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement