• Oct 22 2026

தித்வா புயலால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம்; புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Aathira / Oct 22nd 2026, 11:10 am
image

தித்வா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள வட்டவளை புகையிரத நிலையத்தைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் புகையிரதத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்தப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளன.

கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது, புகையிரத நிலையத்திற்குப் பின்னால் உள்ள சரிவுப் பகுதியிலிருந்து மண் சரிந்து கட்டிடத்தின் மீது விழுந்ததால் நிலையம் பலத்த சேதமடைந்தது.

இதற்கிடையில், நிலையத்தின் தற்காலிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாற்றுக் கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. 

சேதமடைந்த நிலையத்தைப் புனரமைப்பதுடன், அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சரிவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மண்சரிவு நிலைமை அல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்துள்ளார்.

வட்டவளை புகையிரத நிலையத்தில் நடைபெற்ற கள ஆய்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தித்வா புயலால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம்; புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் தித்வா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள வட்டவளை புகையிரத நிலையத்தைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் புகையிரதத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்தப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளன.கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது, புகையிரத நிலையத்திற்குப் பின்னால் உள்ள சரிவுப் பகுதியிலிருந்து மண் சரிந்து கட்டிடத்தின் மீது விழுந்ததால் நிலையம் பலத்த சேதமடைந்தது.இதற்கிடையில், நிலையத்தின் தற்காலிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாற்றுக் கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த நிலையத்தைப் புனரமைப்பதுடன், அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த சரிவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மண்சரிவு நிலைமை அல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்துள்ளார்.வட்டவளை புகையிரத நிலையத்தில் நடைபெற்ற கள ஆய்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement