முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் அழைக்கப்பட்டமைக்கான குறிப்பிட்ட காரணம் மற்றும் விசாரணையின் மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விசாரணைப் பிரிவில் ஆஜரான முன்னாள் எம்.பி. திஸ்ஸகுட்டி ஆரச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை ஆஜராகியுள்ளார்.வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், அவர் அழைக்கப்பட்டமைக்கான குறிப்பிட்ட காரணம் மற்றும் விசாரணையின் மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.