நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளைக் குறிவைத்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 104,094 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 32 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டிலுள்ள 360 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுமார் 175 பிரிவுகள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள அதிக அபாயம் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முன்னெடுப்பதன் மூலம் அடுத்த மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2 முதல் இலங்கையில் தீவிரமடையும் சுற்றிவளைப்பு - 175 பிரிவுகள் அதிக ஆபத்தில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தீர்மானித்துள்ளது.அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளைக் குறிவைத்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 104,094 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 32 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டிலுள்ள 360 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுமார் 175 பிரிவுகள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள அதிக அபாயம் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.இதனைக் கருத்திற்கொண்டே எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முன்னெடுப்பதன் மூலம் அடுத்த மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.