• May 24 2025

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்

Chithra / May 23rd 2025, 12:06 pm
image


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இடமாற்ற விபரங்கள் பின்வருமாறு: 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.கே. கால்லகே, மொனராகலை பிரிவில் இருந்து நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த, கேகாலை பிரிவில் இருந்து தம்புத்தேகம பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன, பொலிஸ் தலைமையகத்தில் இருந்து மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடமாற்ற விபரங்கள் பின்வருமாறு: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.கே. கால்லகே, மொனராகலை பிரிவில் இருந்து நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த, கேகாலை பிரிவில் இருந்து தம்புத்தேகம பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன, பொலிஸ் தலைமையகத்தில் இருந்து மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement