• May 23 2025

ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்; இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த ஹிருணி

Chithra / May 23rd 2025, 12:26 pm
image

 

கொழும்பு சுகததாக உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில்,இலங்கைக்கான முதலாவது வெள்ளிப் பதக்கத்தை ஹிருணி விஜேசிங்க, நேற்று வென்று கொடுத்தார்.

இளையோர் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் கஸக்ஸ்தான் வீராங்கனை குடெய்ஜெனோவா அலினாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் சுற்றில் 2ஆவது நிமிடத்தில் ஹிருணி விஜேசிங்க போட்டியிலிருந்து வெளியேறினார்.

முதல் சுற்றில் அலினாவின் எதிர்பாராத கடுமையான தாக்குதலில் ஹிருணி நிலைகுலைந்து போனதை அடுத்து மத்தியஸ்தர் போட்டியை நிறுத்தினார்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச அரங்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதையிட்டு திருப்தி அடைவதாக ஹிருணி தெரிவித்தார்.


ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்; இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த ஹிருணி  கொழும்பு சுகததாக உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில்,இலங்கைக்கான முதலாவது வெள்ளிப் பதக்கத்தை ஹிருணி விஜேசிங்க, நேற்று வென்று கொடுத்தார்.இளையோர் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் கஸக்ஸ்தான் வீராங்கனை குடெய்ஜெனோவா அலினாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் சுற்றில் 2ஆவது நிமிடத்தில் ஹிருணி விஜேசிங்க போட்டியிலிருந்து வெளியேறினார்.முதல் சுற்றில் அலினாவின் எதிர்பாராத கடுமையான தாக்குதலில் ஹிருணி நிலைகுலைந்து போனதை அடுத்து மத்தியஸ்தர் போட்டியை நிறுத்தினார்.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச அரங்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதையிட்டு திருப்தி அடைவதாக ஹிருணி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement