• May 25 2026

திருமலையில் பாடசாலைக்கு சென்ற மாணவன் மாயம்; பற்றைக்காட்டில் சைக்கிள், புத்தகப்பை மீட்பு

Chithra / Jan 27th 2026, 10:39 am
image

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் பாடசாலை மாணவன் நேற்று (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

​திருகோணமலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


மாலை நேரமாகியும் மாணவர் வீடு திரும்பாத நிலையில், அவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணியுள்ளனர். 


​குறித்த மாணவர் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.


நேற்று பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்கு மாணவர் சமூகமளிக்கவில்லை என்பதை அறிந்த பாடசாலை நிர்வாகம், இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸாரிலும் முறைப்பாடு செய்தது.


​பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகிலுள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


​காணாமல் போன மாணவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. 


குறித்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸாரும் உறவினர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருமலையில் பாடசாலைக்கு சென்ற மாணவன் மாயம்; பற்றைக்காட்டில் சைக்கிள், புத்தகப்பை மீட்பு திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் பாடசாலை மாணவன் நேற்று (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​திருகோணமலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.மாலை நேரமாகியும் மாணவர் வீடு திரும்பாத நிலையில், அவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணியுள்ளனர். ​குறித்த மாணவர் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.நேற்று பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்கு மாணவர் சமூகமளிக்கவில்லை என்பதை அறிந்த பாடசாலை நிர்வாகம், இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸாரிலும் முறைப்பாடு செய்தது.​பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகிலுள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.​காணாமல் போன மாணவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. குறித்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸாரும் உறவினர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement