• Oct 10 2026

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை

Aathira / Oct 9th 2026, 7:29 am
image

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் தாம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த காணிகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கால்நடைப் பண்ணையாளர்கள், தமது மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸாரும் மகாவலி அதிகாரிகளும் தம்மை வெளியேற்றும் வகையில் செயற்படுவதாகவும், அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இடமளிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், 

தாம் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது எனக் கூறப்பட்ட காணிகள் இறுதியில் மகாவலி அதிகாரிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், கால்நடைகளை காட்டுப் பகுதிகளில் கட்டி வைக்குமாறு தங்களிடம் கூறப்படுவதாகவும், அவ்வாறு செய்வது தங்களுக்கும் கால்நடைகளுக்கும் நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க அதிபரிடம் நிலைமைகளை எடுத்துரைத்தபோதும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சுமார் 15 வருடங்களாகப் பல்வேறு சிரமங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலைமை தமது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

தாம் சிங்கள மக்களுடன் முரண்படவில்லை எனக் கூறிய நிமலன், இந்தப் பிரச்சினைக்கு அமைப்புகளும் பொலிஸாரும் காரணமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 

பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், கடந்த இரவும் இன்றைய காலையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளியேறுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மயிலத்தமடு பகுதியில் பயிர்களை அழிப்பதாகக் கூறி அண்மையில் வெளியிடப்பட்ட சில காணொளிகள் தவறானவை எனவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர். 

அவை மயிலத்தமடு பகுதியில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அம்பாறை மாவட்டத்தின் திவில்பத்தான பகுதியில் எடுக்கப்பட்ட காணொளிகளைப் பயன்படுத்தி தமிழ் பண்ணையாளர்கள் குறித்து தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தலையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் பயன்படுத்தி வந்த மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் தாம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த காணிகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கால்நடைப் பண்ணையாளர்கள், தமது மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொலிஸாரும் மகாவலி அதிகாரிகளும் தம்மை வெளியேற்றும் வகையில் செயற்படுவதாகவும், அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இடமளிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், தாம் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது எனக் கூறப்பட்ட காணிகள் இறுதியில் மகாவலி அதிகாரிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.மேலும், கால்நடைகளை காட்டுப் பகுதிகளில் கட்டி வைக்குமாறு தங்களிடம் கூறப்படுவதாகவும், அவ்வாறு செய்வது தங்களுக்கும் கால்நடைகளுக்கும் நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க அதிபரிடம் நிலைமைகளை எடுத்துரைத்தபோதும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.சுமார் 15 வருடங்களாகப் பல்வேறு சிரமங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலைமை தமது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.தாம் சிங்கள மக்களுடன் முரண்படவில்லை எனக் கூறிய நிமலன், இந்தப் பிரச்சினைக்கு அமைப்புகளும் பொலிஸாரும் காரணமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், கடந்த இரவும் இன்றைய காலையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளியேறுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, மயிலத்தமடு பகுதியில் பயிர்களை அழிப்பதாகக் கூறி அண்மையில் வெளியிடப்பட்ட சில காணொளிகள் தவறானவை எனவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர். அவை மயிலத்தமடு பகுதியில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அம்பாறை மாவட்டத்தின் திவில்பத்தான பகுதியில் எடுக்கப்பட்ட காணொளிகளைப் பயன்படுத்தி தமிழ் பண்ணையாளர்கள் குறித்து தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.எனவே, ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தலையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் பயன்படுத்தி வந்த மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement