• Oct 13 2026

குடும்ப தகராறால் நடந்த விபரீதம்-இரு குழந்தைகளுடன் தாய் செய்த செயல்

Ziya / Oct 8th 2026, 2:41 pm
image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, குடும்பத் தகராறைத் தொடர்ந்து தாய் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிவகிரி அருகே வடக்கு சத்திரம் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி என்பவருக்கும், மாரியம்மாள் என்பவருக்கும் திருமணமாகி, 5 மற்றும் 4 வயதுடைய இரு மகன்கள் இருந்தனர். 


கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 5ஆம் திகதி இரவு, அப்பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு மாரியம்மாள் தனது இரு குழந்தைகளுடன் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவர் குழந்தைகளுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.


பின்னர் வீட்டில் தாய் மற்றும் இரு குழந்தைகளும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறால் நடந்த விபரீதம்-இரு குழந்தைகளுடன் தாய் செய்த செயல் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, குடும்பத் தகராறைத் தொடர்ந்து தாய் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகிரி அருகே வடக்கு சத்திரம் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி என்பவருக்கும், மாரியம்மாள் என்பவருக்கும் திருமணமாகி, 5 மற்றும் 4 வயதுடைய இரு மகன்கள் இருந்தனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 5ஆம் திகதி இரவு, அப்பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு மாரியம்மாள் தனது இரு குழந்தைகளுடன் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவர் குழந்தைகளுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.பின்னர் வீட்டில் தாய் மற்றும் இரு குழந்தைகளும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement