தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பின் (BICT) பரீட்சை நிர்வாகத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய இணையவழித் தரவுத்தள முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Online Examination Database Management System எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முறைமை, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடக் கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற விசேட நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், BICT கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி ஐ.எம். காலித், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திணைக்களத் தலைவர் எம்.ஜெ. அஹமட் சபானி உள்ளிட்ட கல்வி மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பரீட்சை நிர்வாக நடவடிக்கைகளை விரைவாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தரவுகளை ஒரே டிஜிட்டல் தரவுத்தளத்தில் நிர்வகிப்பதன் மூலம் ஆவணப் பயன்பாட்டைக் குறைத்து, நிர்வாகச் செயற்பாடுகளின் வேகம், துல்லியம், தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பரீட்சை நடவடிக்கைகளின் பல்வேறு கட்டங்களைக் கண்காணிப்பதுடன், தேவையான தகவல்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளவும் இந்த முறைமை உதவும்.
எதிர்காலத்தில் BICT பட்டப்படிப்புடன் தொடர்புடைய பரீட்சைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் இந்த இணையவழி முறைமையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த முறைமையை CEDPL நிலையத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் எம்.ஜி. றோசன் முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளார். நிகழ்வின்போது அதன் செயற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
பல்கலைக்கழகத்தின் சொந்த மனிதவளத்தையும் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களின் பரீட்சை நிர்வாகத்தை டிஜிட்டல் மயப்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, பல்கலைக்கழகக் கல்வி நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய இணையவழிப் பரீட்சை நிர்வாக முறைமை அறிமுகம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பின் (BICT) பரீட்சை நிர்வாகத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய இணையவழித் தரவுத்தள முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Online Examination Database Management System எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முறைமை, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடக் கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற விசேட நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், BICT கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி ஐ.எம். காலித், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திணைக்களத் தலைவர் எம்.ஜெ. அஹமட் சபானி உள்ளிட்ட கல்வி மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.பரீட்சை நிர்வாக நடவடிக்கைகளை விரைவாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தரவுகளை ஒரே டிஜிட்டல் தரவுத்தளத்தில் நிர்வகிப்பதன் மூலம் ஆவணப் பயன்பாட்டைக் குறைத்து, நிர்வாகச் செயற்பாடுகளின் வேகம், துல்லியம், தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பரீட்சை நடவடிக்கைகளின் பல்வேறு கட்டங்களைக் கண்காணிப்பதுடன், தேவையான தகவல்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளவும் இந்த முறைமை உதவும். எதிர்காலத்தில் BICT பட்டப்படிப்புடன் தொடர்புடைய பரீட்சைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் இந்த இணையவழி முறைமையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.இந்த முறைமையை CEDPL நிலையத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் எம்.ஜி. றோசன் முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளார். நிகழ்வின்போது அதன் செயற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.பல்கலைக்கழகத்தின் சொந்த மனிதவளத்தையும் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களின் பரீட்சை நிர்வாகத்தை டிஜிட்டல் மயப்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, பல்கலைக்கழகக் கல்வி நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.