முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84%கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காதுள்ள தகவல் தொழினுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவுவதற்கு வகை செய்யுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அதற்காக 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் தம்மால் முன்மொழியப்படவிருக்கின்ற ஐந்துவருடகால கருத்திட்டத்தினூடாக தகவல் தொழில்நுட்ப வளநிலையம் தொடர்பில் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றில் 08.10.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடம் தோடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ பிரதமர் அவர்களே, அரசாங்கத்தால் தீவளாவிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களில் சில கல்வி வலயங்களும் சில மாவட்டங்களும் விடுபட்டிருப்பதென்பது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல அளவீடுகளிலும் “இல்லை” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஆறு கல்வி வலயங்களில் முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களில் இவ்வாறான கணினி வள நிலையங்கள் இல்லை என்று அறிகிறோம். முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84%கணினிகள் செயலிழந்த நிலையில் உள்ளன. 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் உள்ளன.
இது வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களிலும் மிகவும் பின்னடைவான புள்ளிவிபரமாக உள்ளது. இப்படி அதிகப்படியான கணினிச்சாதனங்கள் செயலிழந்தால் கணினி மயப்பட்ட கற்பித்தலை எவ்வாறு பாடசாலைகளில் வினைத்திறனாக கொண்டு செல்ல இயலும்.
ஒரு வலயத்தில் அமையப்பெறும் கணினி வள நிலையம் இவ்வாறான கணினி வளங்களின் தொடர் பராமரிப்புக்கு வலுச்சேர்ப்பதோடு அவ்வலய ஆளணியின் தகவல் தொழினுட்ப அறிவூட்டலுக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.
எனவே, தயவுசெய்து, இவ்வாறு பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காதுள்ள தகவல் தொழினுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவ வகை செய்ய இயலுமா எனக் கேட்டுக்கொள்கின்றேன் -என்றார்.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்ட இந்தக் கேள்வி நியாயமானது. விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் சில மாகாணங்களில் போதியளவு கணனி வளநிலையங்கள் இல்லை.
அத்தோடு 2026ஆம் ஆண்டு கணக்காய்வுகளை மேற்கொண்டபோது 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவிதமா புதிய உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறியமுடிகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய உபகரணங்களே அங்கு காணப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயம் உண்மையானது.
ஆகவேதான் நாம் ஐந்துவருட கருத்திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். அந்தக் கருத்திட்டத்தை 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியவிருக்கின்றோம்.
அந்தவகையில் திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு இருமொழிக் கல்வியைப் பாடசாலைகளில் ஆரம்பித்து அவற்றுக்கான வசதிகளை வழங்குவதுடன், அந்த வலயங்களிலுள்ள நிலையங்களை மேம்படுத்துவதற்கும் ஐந்துவருட கால செயற்றிட்டத்தினை முன்வைக்கவிருக்கின்றோம் - என்றார்.
முல்லைத்தீவு, மன்னாரில் 2027இல் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள் பிரதமர் உறுதி முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84%கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காதுள்ள தகவல் தொழினுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவுவதற்கு வகை செய்யுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் அதற்காக 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் தம்மால் முன்மொழியப்படவிருக்கின்ற ஐந்துவருடகால கருத்திட்டத்தினூடாக தகவல் தொழில்நுட்ப வளநிலையம் தொடர்பில் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார்.பாராளுமன்றில் 08.10.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடம் தோடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,கௌரவ பிரதமர் அவர்களே, அரசாங்கத்தால் தீவளாவிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களில் சில கல்வி வலயங்களும் சில மாவட்டங்களும் விடுபட்டிருப்பதென்பது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல அளவீடுகளிலும் “இல்லை” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஆறு கல்வி வலயங்களில் முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களில் இவ்வாறான கணினி வள நிலையங்கள் இல்லை என்று அறிகிறோம். முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84%கணினிகள் செயலிழந்த நிலையில் உள்ளன. 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் உள்ளன.இது வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களிலும் மிகவும் பின்னடைவான புள்ளிவிபரமாக உள்ளது. இப்படி அதிகப்படியான கணினிச்சாதனங்கள் செயலிழந்தால் கணினி மயப்பட்ட கற்பித்தலை எவ்வாறு பாடசாலைகளில் வினைத்திறனாக கொண்டு செல்ல இயலும்.ஒரு வலயத்தில் அமையப்பெறும் கணினி வள நிலையம் இவ்வாறான கணினி வளங்களின் தொடர் பராமரிப்புக்கு வலுச்சேர்ப்பதோடு அவ்வலய ஆளணியின் தகவல் தொழினுட்ப அறிவூட்டலுக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.எனவே, தயவுசெய்து, இவ்வாறு பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காதுள்ள தகவல் தொழினுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவ வகை செய்ய இயலுமா எனக் கேட்டுக்கொள்கின்றேன் -என்றார்.இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்ட இந்தக் கேள்வி நியாயமானது. விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் சில மாகாணங்களில் போதியளவு கணனி வளநிலையங்கள் இல்லை.அத்தோடு 2026ஆம் ஆண்டு கணக்காய்வுகளை மேற்கொண்டபோது 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவிதமா புதிய உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறியமுடிகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய உபகரணங்களே அங்கு காணப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயம் உண்மையானது.ஆகவேதான் நாம் ஐந்துவருட கருத்திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். அந்தக் கருத்திட்டத்தை 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியவிருக்கின்றோம்.அந்தவகையில் திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தோடு இருமொழிக் கல்வியைப் பாடசாலைகளில் ஆரம்பித்து அவற்றுக்கான வசதிகளை வழங்குவதுடன், அந்த வலயங்களிலுள்ள நிலையங்களை மேம்படுத்துவதற்கும் ஐந்துவருட கால செயற்றிட்டத்தினை முன்வைக்கவிருக்கின்றோம் - என்றார்.