• Jan 16 2026

பருத்தித்துறை இன்பருட்டி பகுதியில் கஞ்சா மீட்பு!

shanuja / Jan 14th 2026, 5:31 pm
image

பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்றையதினம் கஞ்சாபொதி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 


இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில்  பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். 


இதன்போதே 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை  பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


மேலும் சந்தேக நபரைத் தடுத்து வைத்து அவரிடம்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை இன்பருட்டி பகுதியில் கஞ்சா மீட்பு பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்றையதினம் கஞ்சாபொதி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில்  பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை  பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரைத் தடுத்து வைத்து அவரிடம்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement