• Nov 04 2024

.நியூஸிலாந்து அணிக்கெதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

Tamil nila / Sep 25th 2024, 10:42 pm
image

Advertisement

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அணியை ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. 

 தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை பதினொருவர் அணியில், திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸங்க, குஷல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க மற்றும் அஷித பெர்னாண்டொ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

 கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவுக்கு காயம் ஏற்பட்டமையினால் அவர் தொடரிலிருந்து விலகினார். 

 அவருக்கு பதிலாக நிஷான் பீரிஸ் இலங்கை பதினொருவர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். 

 இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை ஆரம்பமாகவுள்ளது. 

 இந்த தொடரில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

.நியூஸிலாந்து அணிக்கெதிரான இலங்கை குழாம் அறிவிப்பு நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அணியை ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.  தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை பதினொருவர் அணியில், திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸங்க, குஷல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க மற்றும் அஷித பெர்னாண்டொ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவுக்கு காயம் ஏற்பட்டமையினால் அவர் தொடரிலிருந்து விலகினார்.  அவருக்கு பதிலாக நிஷான் பீரிஸ் இலங்கை பதினொருவர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.  இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை ஆரம்பமாகவுள்ளது.  இந்த தொடரில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement