யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் “பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டது” என பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு நினைவு பலகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளதென பொறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழில் அமைக்கப்படும் சர்வதேச தர கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கலந்து கொண்டிருந்தார். இந்த மைதானத்துக்கான திறப்பு நினைவுபலகையில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாமை பலரின் அவதானத்தை பெற்றுள்ளது.
தமிழ் எழுத்துக்கள் பிழையின்றி தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்கி, “மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது."என பொறிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள், கட்டடங்களில் இவ்வளவு காலமும் வடிவமைக்கப்பட்ட கல்வெட்டில், செலவலிக்கப்பட்ட நிதித்தொகை, எந்த அமைச்சு, எந்த அமைச்சர், உள்ளூராட்சி பிரதிநிதிகள் முதற்கொண்டு காணப்படும் ஆனால் இந்த விடயங்களை தவிர்த்து குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டமையானது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.
இது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான அரசியல் எடுத்துகாட்டாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பெயர் பொறிக்காத திறப்பு நினைவு பலகை; தமிழுக்கும் முன்னுரிமை பலரின் கவனத்தை ஈர்த்த அநுரவின் செயல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.கடவுச்சீட்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் “பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டது” என பொறிக்கப்பட்டுள்ளது.குறித்த திறப்பு நினைவு பலகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளதென பொறிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழில் அமைக்கப்படும் சர்வதேச தர கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கலந்து கொண்டிருந்தார். இந்த மைதானத்துக்கான திறப்பு நினைவுபலகையில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாமை பலரின் அவதானத்தை பெற்றுள்ளது.தமிழ் எழுத்துக்கள் பிழையின்றி தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்கி, “மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது."என பொறிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள், கட்டடங்களில் இவ்வளவு காலமும் வடிவமைக்கப்பட்ட கல்வெட்டில், செலவலிக்கப்பட்ட நிதித்தொகை, எந்த அமைச்சு, எந்த அமைச்சர், உள்ளூராட்சி பிரதிநிதிகள் முதற்கொண்டு காணப்படும் ஆனால் இந்த விடயங்களை தவிர்த்து குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டமையானது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.இது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான அரசியல் எடுத்துகாட்டாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது சம்பிரதாயபூர்வமாக 03 பேருக்கு கடவுச்சீட்டுக்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், ஒருவருடைய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.