ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த வரிச் சலுகையின் மீளாய்வுக்காக இலங்கைக்கு வந்துள்ள தூதுக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் இந்த விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவடையவுள்ளமையினால் GSP+ வரிச்சலுகைக்கு இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 'தாம் இரு முறை சரிபார்த்ததாகவும் நீடிப்பைக் கோருவதற்கு எந்த எல்லையும் இல்லை' என்றும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் ஆகியவற்றில் இலங்கை தற்போது தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
GSP+ வரிச்சலுகைக்கு இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க நேரிடும் - எச்சரிக்கும் ஹர்ஷ ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த வரிச் சலுகையின் மீளாய்வுக்காக இலங்கைக்கு வந்துள்ள தூதுக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் இந்த விடயத்தைப் பதிவிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவடையவுள்ளமையினால் GSP+ வரிச்சலுகைக்கு இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 'தாம் இரு முறை சரிபார்த்ததாகவும் நீடிப்பைக் கோருவதற்கு எந்த எல்லையும் இல்லை' என்றும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் ஆகியவற்றில் இலங்கை தற்போது தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.