• Dec 11 2024

நாடளாவிய ரீதியில் இன்று பல ரயில் சேவைகள் இரத்து

Chithra / Nov 14th 2024, 8:46 am
image

 

சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் குறைந்தது 10 ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கூறியுள்ளது.

அத்துடன், சாரதிகள் இல்லாத காரணத்தினால் மேலும் 22 ரயில் சேவைகள் இயங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அளவிலான சாரதிகள் நியமிக்கப்படாவிடின், நிலைமை தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் பயணங்களை அவதானமாக திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் இன்று பல ரயில் சேவைகள் இரத்து  சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் குறைந்தது 10 ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கூறியுள்ளது.அத்துடன், சாரதிகள் இல்லாத காரணத்தினால் மேலும் 22 ரயில் சேவைகள் இயங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அளவிலான சாரதிகள் நியமிக்கப்படாவிடின், நிலைமை தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் பயணங்களை அவதானமாக திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement