ரயில் மோதித் தள்ளியதில் 50 மீற்றர் தூரத்திற்கு பாடசாலை பஸ் தூக்கி வீசப்பட்டத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இடம்பெற்றுள்ளது.
செம்மங்குப்பம் அருகே உள்ள ரெயில்வே பாதையைக் கடக்க முயன்ற பாடசாலை பஸ் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் படுகாயமடைந்த பஸ் சாரதி மற்றும் மாணவர்கள் கடலூர் அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் கடவைக் காவலாளியின் கவனக்குறைவால் ரயில் கடவை பாதை மூடாமையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தையடுத்து கடலூர் - மயிலாடுதுறை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாடசாலை பஸ் தூக்கி வீசப்பட்டு நொருங்கியதில் ரயில் கடவையில் ஆங்காங்கே மாணவர்களின் புத்தகப்பைகள் சிதறி கிடப்பது அனைவரது மனதையும் பதைபதைக்க வைக்கும் காட்சியாகப் பதிவாகியுள்ளது.
ரயில் மோதி 50 மீற்றருக்கு தூக்கி வீசப்பட்ட பாடசாலை பஸ் - மாணவர்கள் இருவர் உயிரிழப்பு ரயில் மோதித் தள்ளியதில் 50 மீற்றர் தூரத்திற்கு பாடசாலை பஸ் தூக்கி வீசப்பட்டத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இடம்பெற்றுள்ளது. செம்மங்குப்பம் அருகே உள்ள ரெயில்வே பாதையைக் கடக்க முயன்ற பாடசாலை பஸ் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் உயிரிழந்துள்ளார். அத்துடன் படுகாயமடைந்த பஸ் சாரதி மற்றும் மாணவர்கள் கடலூர் அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் கடவைக் காவலாளியின் கவனக்குறைவால் ரயில் கடவை பாதை மூடாமையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தையடுத்து கடலூர் - மயிலாடுதுறை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாடசாலை பஸ் தூக்கி வீசப்பட்டு நொருங்கியதில் ரயில் கடவையில் ஆங்காங்கே மாணவர்களின் புத்தகப்பைகள் சிதறி கிடப்பது அனைவரது மனதையும் பதைபதைக்க வைக்கும் காட்சியாகப் பதிவாகியுள்ளது.