• May 17 2025

முக்கிய எதிராளியாக இலக்குவைக்கப்படும் சஜித் - மொட்டு உறுப்பினர்களுக்கு நாமலின் அதிரடி அறிவிப்பு

Chithra / Aug 6th 2024, 2:53 pm
image


முக்கிய எதிராளியாக சஜித் பிரேமதாசவை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன இலக்குவைக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி வெற்றி பெறும் நோக்கத்துடன் செயற்படுமாறும் முக்கிய எதிராளியாக எதிர்கட்சி தலைவரை இலக்குவைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகியவர்களை விமர்சிக்கவேண்டாம் எனவும்   அவர்களை கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி பல முறை விமர்சித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான ஐக்கியப்பட்ட அணுகுமுறையை பின்பற்றவேண்டும். கட்சி உள்விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய எதிராளியாக இலக்குவைக்கப்படும் சஜித் - மொட்டு உறுப்பினர்களுக்கு நாமலின் அதிரடி அறிவிப்பு முக்கிய எதிராளியாக சஜித் பிரேமதாசவை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன இலக்குவைக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் கட்சி வெற்றி பெறும் நோக்கத்துடன் செயற்படுமாறும் முக்கிய எதிராளியாக எதிர்கட்சி தலைவரை இலக்குவைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.கட்சியிலிருந்து விலகியவர்களை விமர்சிக்கவேண்டாம் எனவும்   அவர்களை கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி பல முறை விமர்சித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான ஐக்கியப்பட்ட அணுகுமுறையை பின்பற்றவேண்டும். கட்சி உள்விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now