• May 02 2026

விபத்துகளை தடுக்க பாதைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்-நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேல் ரவி கோரிக்கை!

Ziya / May 1st 2026, 12:21 pm
image

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான பாதைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பாரிய அளவிலான மூன்று வாகன விபத்துகளும் இரண்டு சிறிய விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தின் போது அனுமதி பெறப்பட்டுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வாகன விபத்துகளை ஓரளவு குறைக்க முடியும் என முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் இந்நாள் உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.


இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


நோர்வூட் பிரதேச சபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில்  நேற்று முன்தினம் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று சென்.ஜோன் டிலறி பகுதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். பாதைகள் செப்பனிடப்படாமல் இருப்பதும் விபத்துகளுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கின்றது.


இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தில் 6 பாதைகளை செப்பனிட்டு அபிவிருத்தி செய்ய அனுமதி பெறப்பட்டு, நிதிக்கான மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது.


அவற்றில் பொகவான-லின்ஸ்டட், பொகவந்தலாவ-கியூ,  நோர்வூட் போட்ரி வழியாக டின்சின், புளியாவத்தை நியூட்டன் வழியாக கிளங்கன் வைத்தியசாலை, ராணிக்காடு-கெம்பியன், சென்.ஜோன் டிலறி கியூ பாதைகளும் அடங்கும். 


இவற்றை அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சபை அனுமதி வழங்கியிருந்த போதிலும், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில பாதைகளின் செப்பனிடும் பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. 


அவற்றில் ஒன்றான சென்.ஜோன் டிலறி பாதையில் அண்மையில் வாகன விபத்து ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


சில பாதைகளில் மாகாண சபையின் ஊடாக அனுமதிக்கட்ட தனியார் பஸ்களும் சேவையில் ஈட்டுபட்டு வருகின்றன. பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் அன்றாடத் தேவைக்கு பெருமளவில் பயன்படுத்தி வரும் பிரதான போக்குவரத்துப் பாதைகளை செப்பனிட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து அழுத்தம் கொடுக்க வேண்டியது பிரதேச சபையின் பொறுப்பாகும் என்பதை மறந்து விடக் கூடாது.


மே மாதத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்த நேரத்தில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நோர்வூட் பிரதேச சபைக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பாதைகளை உடனடியாக அபிவிருத்தி செய்ய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, வளைவுகள் அதிகமாக உள்ள பிரதான பாதைகளில் பாதுகாப்பை கருத்திற் கொண்டு எச்சரிக்கை பலகை (Signal Board) பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விபத்துகளை தடுக்க பாதைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்-நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேல் ரவி கோரிக்கை நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான பாதைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பாரிய அளவிலான மூன்று வாகன விபத்துகளும் இரண்டு சிறிய விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தின் போது அனுமதி பெறப்பட்டுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வாகன விபத்துகளை ஓரளவு குறைக்க முடியும் என முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் இந்நாள் உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நோர்வூட் பிரதேச சபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில்  நேற்று முன்தினம் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று சென்.ஜோன் டிலறி பகுதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். பாதைகள் செப்பனிடப்படாமல் இருப்பதும் விபத்துகளுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கின்றது.இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தில் 6 பாதைகளை செப்பனிட்டு அபிவிருத்தி செய்ய அனுமதி பெறப்பட்டு, நிதிக்கான மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது.அவற்றில் பொகவான-லின்ஸ்டட், பொகவந்தலாவ-கியூ,  நோர்வூட் போட்ரி வழியாக டின்சின், புளியாவத்தை நியூட்டன் வழியாக கிளங்கன் வைத்தியசாலை, ராணிக்காடு-கெம்பியன், சென்.ஜோன் டிலறி கியூ பாதைகளும் அடங்கும். இவற்றை அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சபை அனுமதி வழங்கியிருந்த போதிலும், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில பாதைகளின் செப்பனிடும் பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றான சென்.ஜோன் டிலறி பாதையில் அண்மையில் வாகன விபத்து ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சில பாதைகளில் மாகாண சபையின் ஊடாக அனுமதிக்கட்ட தனியார் பஸ்களும் சேவையில் ஈட்டுபட்டு வருகின்றன. பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் அன்றாடத் தேவைக்கு பெருமளவில் பயன்படுத்தி வரும் பிரதான போக்குவரத்துப் பாதைகளை செப்பனிட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து அழுத்தம் கொடுக்க வேண்டியது பிரதேச சபையின் பொறுப்பாகும் என்பதை மறந்து விடக் கூடாது.மே மாதத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்த நேரத்தில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நோர்வூட் பிரதேச சபைக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பாதைகளை உடனடியாக அபிவிருத்தி செய்ய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, வளைவுகள் அதிகமாக உள்ள பிரதான பாதைகளில் பாதுகாப்பை கருத்திற் கொண்டு எச்சரிக்கை பலகை (Signal Board) பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement