• Aug 14 2025

மின்விளக்கு கம்பத்தில் ஏறிய நபரை மின்தூக்கியால் இறக்கிய பொலிஸார்; பொரளையில் பதற்றம்- காணொளி வைரல்!

shanuja / Aug 14th 2025, 4:36 pm
image

கொழும்பு - பொரளை பிரதான வீதியொன்றிலுள்ள  மின்விளக்கு கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பில் தெரிய வருவதாவது, 


பொரளை பிரதான வீதியிலுள்ள மின்விளக்கு கம்பம் ஒன்றில் நபரொருவர்  ஏறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.


இருப்பினும் எதற்காக எதிரப்பு தெரிவித்தார் என்பது தொடர்பில் அவர் காரணம் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


தனக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்விளக்கு கம்பத்தில் ஏறி  குறிப்பிட்ட நேரம் இருந்துள்ளார். 


குறித்த வீதியால் சென்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் திரண்டு குறித்த நபரை வேடிக்கை பார்த்ததுடன் அவரைக் காணொளிகளும் எடுத்தனர். 


இதனால் குறித்த வீதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவத்தையறிந்து குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர். 


அதனையடுத்து  மின்விளக்கு கம்பத்தில் இருந்து குறித்த நபரை  கீழே இறக்குவதற்காக  பொலிஸார் கடுமையாகப் போராடி முரண்டனர்.


அதன்பின்னர்  மின் தூக்கியொன்றை வரவழைத்து பெரும் முயற்சியின் பின்னர்  அவரை கீழே இறக்கினர். 


திடீரென நபரொருவர் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் சிந்திக்காமல் மின்விளக்கு கம்பத்தில் ஏறி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அத்துடன் மின்விளக்கு கம்பத்தில் அவர் ஏறி இருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பதற்றத்தை ஏற்படுத்தியதாக இருப்பினும் மறுபுறம் கேளிக்கையாகவும் பேசப்பட்டு வைரலாகி வருகின்றது.

மின்விளக்கு கம்பத்தில் ஏறிய நபரை மின்தூக்கியால் இறக்கிய பொலிஸார்; பொரளையில் பதற்றம்- காணொளி வைரல் கொழும்பு - பொரளை பிரதான வீதியொன்றிலுள்ள  மின்விளக்கு கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பில் தெரிய வருவதாவது, பொரளை பிரதான வீதியிலுள்ள மின்விளக்கு கம்பம் ஒன்றில் நபரொருவர்  ஏறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இருப்பினும் எதற்காக எதிரப்பு தெரிவித்தார் என்பது தொடர்பில் அவர் காரணம் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்விளக்கு கம்பத்தில் ஏறி  குறிப்பிட்ட நேரம் இருந்துள்ளார். குறித்த வீதியால் சென்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் திரண்டு குறித்த நபரை வேடிக்கை பார்த்ததுடன் அவரைக் காணொளிகளும் எடுத்தனர். இதனால் குறித்த வீதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவத்தையறிந்து குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர். அதனையடுத்து  மின்விளக்கு கம்பத்தில் இருந்து குறித்த நபரை  கீழே இறக்குவதற்காக  பொலிஸார் கடுமையாகப் போராடி முரண்டனர்.அதன்பின்னர்  மின் தூக்கியொன்றை வரவழைத்து பெரும் முயற்சியின் பின்னர்  அவரை கீழே இறக்கினர். திடீரென நபரொருவர் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் சிந்திக்காமல் மின்விளக்கு கம்பத்தில் ஏறி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் மின்விளக்கு கம்பத்தில் அவர் ஏறி இருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பதற்றத்தை ஏற்படுத்தியதாக இருப்பினும் மறுபுறம் கேளிக்கையாகவும் பேசப்பட்டு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement