• May 24 2025

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்..!

Sharmi / May 23rd 2025, 9:26 am
image

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர் நேற்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இந்நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27 ஆம் ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு 27 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல். இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.கைது செய்யப்பட்டவர் நேற்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27 ஆம் ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு 27 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement