• Aug 29 2025

மீண்டும் இன்று ஒன்றுகூடவுள்ள எதிர்க்கட்சிகள் - அரசை கவிழ்க்க சூழ்ச்சி

Chithra / Aug 28th 2025, 3:22 pm
image

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபடுவதற்கும் முன்னோடித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 

அரசாங்கம் அடக்குமுறையான முறையில் நகர்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் அதன் பின்னர் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து இன்று விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் இன்று ஒன்றுகூடவுள்ள எதிர்க்கட்சிகள் - அரசை கவிழ்க்க சூழ்ச்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபடுவதற்கும் முன்னோடித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  அரசாங்கம் அடக்குமுறையான முறையில் நகர்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் அதன் பின்னர் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து இன்று விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement