• Aug 05 2025

மக்களின் கவனத்தை ஈர்த்த 10 கோடி பெறுமதியான கார்; நடுவீதியில் திடீரென தீப்பிடித்த சோகம்!

shanuja / Aug 5th 2025, 10:08 am
image

மக்களின் கவனத்தை ஈர்த்து வந்த 10 கோடி பெறுமதியிலான கார் ஒன்று திடீரென நடுவீதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 


பெங்களூரைச் சேர்ந்த  சஞ்சீவ் என்ற நபர் ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். 


அது தொடர்பான படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம்  Followers ஐக் கொண்டு பிரபலமாக உள்ளார். 


இந்த நிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதியில் செலுத்திச் சென்றுள்ளார்.  


குறித்த சொகுசு கார், 10 கோடி ரூபா  மதிப்புள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் வீதியில் பயணித்த காரை  அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல்  பார்த்து ரசித்தனர்.


பலரது கவனத்தையும் ஈர்த்த கார் திடீரென எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ குபீர் குபீர் என  கார் முழுவதும் எரிந்தது. 


கார் சாரதியான சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். எனினும் நடுவீதியில்  சொகுசு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.   


மக்களின் கவனத்தை ஈர்த்த சொகுசுக் கார் திடீரெனப் பற்றி எரிந்த சம்பவம் காணொளியாக வெளிவந்து கார் பிரியர்களையும் குறித்த நபரின் Followers ஐயும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்த்த 10 கோடி பெறுமதியான கார்; நடுவீதியில் திடீரென தீப்பிடித்த சோகம் மக்களின் கவனத்தை ஈர்த்து வந்த 10 கோடி பெறுமதியிலான கார் ஒன்று திடீரென நடுவீதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த  சஞ்சீவ் என்ற நபர் ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். அது தொடர்பான படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம்  Followers ஐக் கொண்டு பிரபலமாக உள்ளார். இந்த நிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதியில் செலுத்திச் சென்றுள்ளார்.  குறித்த சொகுசு கார், 10 கோடி ரூபா  மதிப்புள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் வீதியில் பயணித்த காரை  அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல்  பார்த்து ரசித்தனர்.பலரது கவனத்தையும் ஈர்த்த கார் திடீரென எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ குபீர் குபீர் என  கார் முழுவதும் எரிந்தது. கார் சாரதியான சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். எனினும் நடுவீதியில்  சொகுசு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.   மக்களின் கவனத்தை ஈர்த்த சொகுசுக் கார் திடீரெனப் பற்றி எரிந்த சம்பவம் காணொளியாக வெளிவந்து கார் பிரியர்களையும் குறித்த நபரின் Followers ஐயும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement