கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது.
இலங்கையின் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த போட்டியில் வடமாகாணம் வெற்றி பெற்றுள்ளது.
வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வீரர்கள் 12பேரும், யாழ். மாவட்டத்தைச்சேர்ந்த 02 வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 01வீரரும் இடம்பிடித்திருந்தனர்.
அதன்படி வெற்றிபெற்ற வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற வடமாகாணம் வீரர்களுக்கு கௌரவிப்பு கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. இலங்கையின் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த போட்டியில் வடமாகாணம் வெற்றி பெற்றுள்ளது. வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வீரர்கள் 12பேரும், யாழ். மாவட்டத்தைச்சேர்ந்த 02 வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 01வீரரும் இடம்பிடித்திருந்தனர்.அதன்படி வெற்றிபெற்ற வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.