• Aug 03 2025

சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதித்த இண்டிகோ; நடுவானில் பரபரப்புச் சம்பவம்

Chithra / Aug 3rd 2025, 3:35 pm
image


விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் கொல்கத்தா இடையிலான  விமான பயணத்தின்போது நடந்த சம்பத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை இண்டிகோ விமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E138 இல் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

அந்த வீடியோவில் விமான பயணி ஒருவர் சக பயணியின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பயணி அழுதவாறே அங்கிருந்து தள்ளிச் சென்றுள்ளார். 

உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 

இதைப் பார்த்த விமான பணியாளர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினர். 

இதையடுத்து மற்ற பயணிகள் அவரை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இதனால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் சக மனிதர்கள் தாக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று மற்ற பயணிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது பயணியை தாக்கியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 


சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதித்த இண்டிகோ; நடுவானில் பரபரப்புச் சம்பவம் விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.மும்பை மற்றும் கொல்கத்தா இடையிலான  விமான பயணத்தின்போது நடந்த சம்பத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை இண்டிகோ விமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E138 இல் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் விமான பயணி ஒருவர் சக பயணியின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பயணி அழுதவாறே அங்கிருந்து தள்ளிச் சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதைப் பார்த்த விமான பணியாளர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினர். இதையடுத்து மற்ற பயணிகள் அவரை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இதனால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.மேலும் சக மனிதர்கள் தாக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று மற்ற பயணிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.அப்போது பயணியை தாக்கியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

Advertisement

Advertisement

Advertisement