மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பேருந்து வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதியின் நடத்தை குறித்து பஸ்ஸில் பயணித்தவர்கள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய,
சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக சீதாஎலிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்து பஸ்ஸில் சாரதி இருக்கையில் பின்புறம் போத்தலில் மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் அரச பேருந்தை செலுத்திச் சென்ற சாரதி சுற்றிவளைப்பில் கைது மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பேருந்து வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சாரதியின் நடத்தை குறித்து பஸ்ஸில் பயணித்தவர்கள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய,சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து, குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக சீதாஎலிய பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்து பஸ்ஸில் சாரதி இருக்கையில் பின்புறம் போத்தலில் மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.