• Aug 03 2025

சிறைக்கு செல்லப்போகும் சஜித் மற்றும் நாமல் - எச்சரித்த பிரதியமைச்சர்

Chithra / Aug 3rd 2025, 7:39 am
image

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு எதிர்க்கட்சியில் பெரும் அரசியல் புள்ளிகள் இன்றில்லை.சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோர் அரசியல் தலைவர்கள் அல்ல.இவர்கள் பெரும் குற்றவாளிகளாக சிறைக்கு செல்ல இருப்பவர்கள் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.ஹேரத்தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 

இன்று நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்கன் டொலர் இருக்கிறது.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது 3 பில்லியன் அமெரிக்கன் டொலர் கூட இருக்கவில்லை. 

இன்று பொருளாதார வளர்ச்சி 8.3ஐ நாம் அடைந்திருக்கிறோம்.

ஐஎம்எப் உடன் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்ததாலேயே, 

நாம் தொடர்ந்து அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.

மேலும், மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்கி அரசாங்கத்தின் அதீத செலவுகளை குறைத்து ஒரு சாதாரண தன்மையை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்கு செல்லப்போகும் சஜித் மற்றும் நாமல் - எச்சரித்த பிரதியமைச்சர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு எதிர்க்கட்சியில் பெரும் அரசியல் புள்ளிகள் இன்றில்லை.சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோர் அரசியல் தலைவர்கள் அல்ல.இவர்கள் பெரும் குற்றவாளிகளாக சிறைக்கு செல்ல இருப்பவர்கள் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.ஹேரத்தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்கன் டொலர் இருக்கிறது.நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது 3 பில்லியன் அமெரிக்கன் டொலர் கூட இருக்கவில்லை. இன்று பொருளாதார வளர்ச்சி 8.3ஐ நாம் அடைந்திருக்கிறோம்.ஐஎம்எப் உடன் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்ததாலேயே, நாம் தொடர்ந்து அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.மேலும், மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்கி அரசாங்கத்தின் அதீத செலவுகளை குறைத்து ஒரு சாதாரண தன்மையை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement