• Aug 03 2025

யாழில் உதைபந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

Chithra / Aug 3rd 2025, 11:56 am
image

 

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்றைய தினம்  நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு, திரும்பியவர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடாத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர் தெரிவிக்கையில், 

உதைப்பந்தாட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு வெளியேறிய போது, கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தலைமையில், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் உள்ளிட்ட கும்பல் என் மீது மூர்க்க தனமாக தாக்குதல் நடாத்தியது, 

நான் அணிந்திருந்த விளையாட்டு கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடையையும் கிழித்துள்ளார்கள். 


இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். 

பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு என் மீது தாக்குதல் நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


யாழில் உதைபந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்  யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்றைய தினம்  நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு, திரும்பியவர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர் தெரிவிக்கையில், உதைப்பந்தாட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு வெளியேறிய போது, கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தலைமையில், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் உள்ளிட்ட கும்பல் என் மீது மூர்க்க தனமாக தாக்குதல் நடாத்தியது, நான் அணிந்திருந்த விளையாட்டு கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடையையும் கிழித்துள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு என் மீது தாக்குதல் நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement