• May 24 2025

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை - சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

IMF
Chithra / May 23rd 2025, 9:22 am
image


இலங்கை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை விரைவாக எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

இதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவர் இதனை, வாராந்திர சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். 

குறித்த ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான இரண்டு விடயங்களை வலியுறுத்திய ஜூலி கொசெக், மேலும் கூறுகையில், 

செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சார விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுவது மற்றும் தானியங்கி மின்சார விலை சரிசெய்வு முறைமையின் உரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை - சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு இலங்கை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை விரைவாக எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் இதனை, வாராந்திர சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். குறித்த ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான இரண்டு விடயங்களை வலியுறுத்திய ஜூலி கொசெக், மேலும் கூறுகையில், செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சார விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுவது மற்றும் தானியங்கி மின்சார விலை சரிசெய்வு முறைமையின் உரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement