பொகவந்தலாவையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இந்தாள் உறுப்பினருமான கணபதி குழந்தைவேலு ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், பொகவந்தலாவை பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், ஒரு புதிய ஆடைத் தொழில்சாலை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்சாலை மூலம் ஆரம்ப கட்டமாக சுமார் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உற்பத்தி விரிவடையும் போதெல்லாம், மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமும் உள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு தங்கள் ஊரிலேயே நிலையான தொழில் வாய்ப்பு உருவாக்குவது ஆகும்.
தொழில்சாலையின் துவக்க விழா கடந்த வாரம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் சமூக பிரதிநிதிகள், தொழில்துறை ஆலோசகர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பொகவந்தலாவை பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெண்கள் சுயநிறைவு அடைவதற்கும் இத்திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய ஆடைத் தொழிற்சாலை பொகவந்தலாவையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இந்தாள் உறுப்பினருமான கணபதி குழந்தைவேலு ரவி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், பொகவந்தலாவை பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், ஒரு புதிய ஆடைத் தொழில்சாலை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்சாலை மூலம் ஆரம்ப கட்டமாக சுமார் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உற்பத்தி விரிவடையும் போதெல்லாம், மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமும் உள்ளது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு தங்கள் ஊரிலேயே நிலையான தொழில் வாய்ப்பு உருவாக்குவது ஆகும்.தொழில்சாலையின் துவக்க விழா கடந்த வாரம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் சமூக பிரதிநிதிகள், தொழில்துறை ஆலோசகர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.பொகவந்தலாவை பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெண்கள் சுயநிறைவு அடைவதற்கும் இத்திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.