• Oct 29 2025

இரவில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்; தூக்கத்தை தொலைத்து பீதியில் வாழும் மூதூர் மக்கள்

Chithra / Oct 29th 2025, 7:33 am
image

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேம்காமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பகல் வேளைகளில் மேம்காமம் குளத்திலும் அதன் ஓரமாகவும் நிற்கும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் ஊருக்குள் வருவதாகவும் இதன் காரணமாக தூக்கத்தை தொலைத்து காவல் நிற்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


அத்தோடு பயன் தரும் மரங்களுக்கு யானைகள் சேதம் விளைவிப்பதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர். 

எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில் யானை பாதுகாப்பு வேலை அமைத்து தருமாறு மேம்காமம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இரவில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்; தூக்கத்தை தொலைத்து பீதியில் வாழும் மூதூர் மக்கள் திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேம்காமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பகல் வேளைகளில் மேம்காமம் குளத்திலும் அதன் ஓரமாகவும் நிற்கும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் ஊருக்குள் வருவதாகவும் இதன் காரணமாக தூக்கத்தை தொலைத்து காவல் நிற்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.அத்தோடு பயன் தரும் மரங்களுக்கு யானைகள் சேதம் விளைவிப்பதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில் யானை பாதுகாப்பு வேலை அமைத்து தருமாறு மேம்காமம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement