• Oct 29 2025

தீவுக்குள் நுழைந்த ஜப்பானின் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO

Chithra / Oct 29th 2025, 9:27 am
image


ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' (அகேபோனோ) நேற்று  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

தீவுக்கு வந்த  'AKEBONO' என்ற கப்பலானது 150.5 மீட்டர் நீளமும், 158 அங்கத்தவர்களை கொண்டதாகும், இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo (கட்சுடோமோ) ஆவார்.

கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், 'AKEBONO' கப்பலின் குழுவினர் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 'AKEBONO' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 31 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளது.


தீவுக்குள் நுழைந்த ஜப்பானின் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' (அகேபோனோ) நேற்று  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.தீவுக்கு வந்த  'AKEBONO' என்ற கப்பலானது 150.5 மீட்டர் நீளமும், 158 அங்கத்தவர்களை கொண்டதாகும், இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo (கட்சுடோமோ) ஆவார்.கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், 'AKEBONO' கப்பலின் குழுவினர் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், 'AKEBONO' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 31 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement