• Oct 30 2025

இராணுவ பயிற்சியில் வெடித்து சிதறிய கைக்குண்டு; மூவரின் நிலை என்ன?

Chithra / Oct 29th 2025, 1:02 pm
image


இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.    

விபத்தில் காயமடைந்த மூன்று இராணுவ வீரர்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்தில் இராணுவ வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இராணுவ பயிற்சியில் வெடித்து சிதறிய கைக்குண்டு; மூவரின் நிலை என்ன இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.    விபத்தில் காயமடைந்த மூன்று இராணுவ வீரர்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இராணுவ வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement