கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும்,
சம்பவ இடத்திலிருந்து கருகிய விமான பாகங்களும், எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்; 12 சுற்றுலாப் பயணிகள் பலி கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும்,சம்பவ இடத்திலிருந்து கருகிய விமான பாகங்களும், எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.