பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் நுட்பமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து சிறைச்சாலைக்கு கொண்டுவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் சேலம் மத்திய சிறையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை சந்திக்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சேலம் சிறைக்கு வந்திருந்தார்.
இதன்போது அவர் கொண்டுவந்த பொதிகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.
சோதனையிட்ட போது அவர் வைத்திருந்த பையில் இருந்த பிரபல பிஸ்கெட் பாக்கெட்டின் அளவு தோற்றம் மாறுபட்ட வடிவில் இருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது வட்டமான பிஸ்கெட்டின் நடுப் பகுதி உடைக்கப்பட்டு வெறும் வளையங்கள் மட்டுமே இருந்தது. அதில் போதைப்பொருளை சொருகி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து 80 கிராம் போதைப்பொருளை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் இருந்த மர்ம பொருள்: பொலிஸார் அதிர்ச்சி. பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் நுட்பமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து சிறைச்சாலைக்கு கொண்டுவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் சேலம் மத்திய சிறையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சேலம் சிறைக்கு வந்திருந்தார்.இதன்போது அவர் கொண்டுவந்த பொதிகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.சோதனையிட்ட போது அவர் வைத்திருந்த பையில் இருந்த பிரபல பிஸ்கெட் பாக்கெட்டின் அளவு தோற்றம் மாறுபட்ட வடிவில் இருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அப்போது வட்டமான பிஸ்கெட்டின் நடுப் பகுதி உடைக்கப்பட்டு வெறும் வளையங்கள் மட்டுமே இருந்தது. அதில் போதைப்பொருளை சொருகி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து 80 கிராம் போதைப்பொருளை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.