நான் இந்தளவிற்கு முன்னேற எனது தந்தையே காரணம். எனது இந்த 3 பதக்கங்களும் உங்களுடையவை என்று இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது.
இதன்போது பதங்கங்களைப் பெற்ற வீர,வீராங்கனைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் 3 சாதனைகளுடன் 3 தங்கப்பதக்கங்களை வென்ற பாத்திமா சபியா யாமிக்கிற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தெற்காசிய தடகள போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற வீர, வீராங்கனைகள் பலர் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களைக் அள்ளிக் குவித்தனர்.
பல சாதனைகளைப் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்து இன்று நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான் இந்தளவிற்கு முன்னேற எனது தந்தையே காரணம்; தெற்காசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நெகிழ்ச்சி நான் இந்தளவிற்கு முன்னேற எனது தந்தையே காரணம். எனது இந்த 3 பதக்கங்களும் உங்களுடையவை என்று இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது.இதன்போது பதங்கங்களைப் பெற்ற வீர,வீராங்கனைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 3 சாதனைகளுடன் 3 தங்கப்பதக்கங்களை வென்ற பாத்திமா சபியா யாமிக்கிற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த தெற்காசிய தடகள போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற வீர, வீராங்கனைகள் பலர் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களைக் அள்ளிக் குவித்தனர். பல சாதனைகளைப் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்து இன்று நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.