• Oct 29 2025

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஹெரோயினுடன் கைது

Chithra / Oct 28th 2025, 3:46 pm
image


அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அநுராதபுரம்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (27) மாலை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

கைதானவர்களில் 44 வயதான இராணுவ சேவையில் இருந்து இடைவிலகிய ஒருவரும், 40 மற்றும் 30 வயதுடைய இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிதாரியாக சந்தேகிக்கப்படும் நபர், டுபாயில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை கைது செய்த போது அவரிடமிருந்து 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஹெரோயினுடன் கைது அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (27) மாலை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைதானவர்களில் 44 வயதான இராணுவ சேவையில் இருந்து இடைவிலகிய ஒருவரும், 40 மற்றும் 30 வயதுடைய இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிதாரியாக சந்தேகிக்கப்படும் நபர், டுபாயில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்த போது அவரிடமிருந்து 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement