• Feb 20 2026

போக்குவரத்து வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மட்டக்களப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

dileesiya / Feb 19th 2026, 3:53 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகின்றது. 


இதன்காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு வீதிகள் மற்றும் சிகரம் வீதி என்பன முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  


வடிகாண்கள் உடனான வீதி கட்டமைப்பு ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் வடிகான்கள் இன்மையினாலேயே தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து வீதிகளை புனரமைத்து தருவதுடன் வடிகாண் கட்டமைப்பையும் செய்துதருமாறு ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மட்டக்களப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு வீதிகள் மற்றும் சிகரம் வீதி என்பன முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  வடிகாண்கள் உடனான வீதி கட்டமைப்பு ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் வடிகான்கள் இன்மையினாலேயே தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து வீதிகளை புனரமைத்து தருவதுடன் வடிகாண் கட்டமைப்பையும் செய்துதருமாறு ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement