திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் பகுதியில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் பெகோ இயந்திரம் மற்றும் மனித ஆளணியை கொண்டு குறித்த நடவடிக்கைகள் நேற்று (23)மாலை முன்னெடுக்கப்பட்டன
பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீரை விரைவாக வெளியேற்றி, மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்
நீரில் மூழ்கிய முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர்– நீரை வெளியேற்றும் பணிகள் ஆரம்பம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் பகுதியில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது.தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் பெகோ இயந்திரம் மற்றும் மனித ஆளணியை கொண்டு குறித்த நடவடிக்கைகள் நேற்று (23)மாலை முன்னெடுக்கப்பட்டனபகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீரை விரைவாக வெளியேற்றி, மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்