• Aug 04 2025

காருடன் மோதி வீதியில் புரண்ட மோட்டார் சைக்கிள்; காயங்களுடன் உயிர்தப்பிய நபர்கள்!

shanuja / Aug 4th 2025, 4:11 pm
image

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி    விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை பிரதான வீதியில் விக்னேஸ்வரா பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. 


விபத்து தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குறித்த வீதியில் பயணித்த கார்  எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் புரண்டு வீதியில் விழுந்தது. 


அத்துடன் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் குறித்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. 


வீதியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணொருவர் சுழன்று கிழே விழுந்துள்ளார். 


வாகனங்கள் மூன்றும் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்தவர்கள்சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


அத்துடன் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தததுடன் காரும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் பின்னால் இருந்த பெண் சுழன்று கீழே விழுந்த காட்சி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காருடன் மோதி வீதியில் புரண்ட மோட்டார் சைக்கிள்; காயங்களுடன் உயிர்தப்பிய நபர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி    விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை பிரதான வீதியில் விக்னேஸ்வரா பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீதியில் பயணித்த கார்  எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் புரண்டு வீதியில் விழுந்தது. அத்துடன் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் குறித்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. வீதியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணொருவர் சுழன்று கிழே விழுந்துள்ளார். வாகனங்கள் மூன்றும் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்தவர்கள்சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தததுடன் காரும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் பின்னால் இருந்த பெண் சுழன்று கீழே விழுந்த காட்சி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement